பாஜக மாணவர் அமைப்பை எதிர்த்ததால் தமக்கு பலாத்கார மிரட்டல்கள் வருவதாக டெல்லி மாணவி பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.க்கு எதிராக பிரசாரம் செய்ததால் தமக்கு பலாத்கார மிரட்டல் வருவதாக டெல்லி பல்கலைக் கழக மாணவியும் கார்கில் போரில் உயிர்நீத்த மாவீரர் கேப்டன் மன்தீப் சிங் மகளுமான குர்மேகர் கவுர் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குர்மேகர் கவுர் கூறியுள்ளதாவது:
பாரதிய ஜனதா கட்சி இந்த நாட்டை அழித்துவிடும். பாஜக குண்டர்களுக்கு எதிராக ஒவ்வொருவரும் போராட வேண்டும்.
பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வதால் நிறைய மிரட்டல்கள் வருகின்றன. என்னை பலாத்காரம் செய்யப் போவதாகவும் கூட மிரட்டுகின்றனர்.
இவ்வாறு குர்மேகர் கவுர் தெரிவித்துள்ளார்,
தம்முடைய ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களிலும் தாம் ஏபிவிபி குறித்து அச்சப்படுவதாகவும் தாம் தனி நபர் அல்ல; எனக்கு பின்னால் ஒட்டுமொத்த இந்திய மாணவர் சமூகம் இருக்கிறது என்ற பதாகையை ஏந்திய போட்டோவையும் குர்மேகர் கவுர் வெளியிட்டுள்ளார்.
சிட்டி

No comments:
Write comments