Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 9, 2016

இன்னொரு மல்லையாவ தாங்காதுடா இந்த நாடு...!

வங்கிகளில் பெரும்பெரும் கம்பெனிகள் வராக்கடன் அளவு வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ள நிலையில், இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் நாடு திவாலாக ஆகிவிடும் என கூறுகிறது மத்திய ரிசர்வ் வங்கி.

மத்திய அரசின் 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு விற்பனை திட்டத்தை விடவும் மிகப்பெரிய அளவில் இந்திய நிறுவனங்கள் தனது சொத்துக்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் தாங்கள் வங்கிகளிலிருந்து வாங்கியிருந்த கடனை திருப்பிச்செலுத்த வங்கிகள் அழுத்தம் கொடுத்துவருவதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்திய வங்கிகளில் டாப் 10 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை  ஏறக்குறைய 5 லட்ச கோடியாகும். இந்த 10 நிறுவனங்களில் அம்பானி சகோதரர்கள், அதானி குழுமம், எஸ்ஸார் குழுமம் உள்ளது. இதோடுமட்டுமல்லாமல் வங்கிகளிலிருந்து கொடுக்கப்பட்ட கடன் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனை அப்படியே விட்டுவிட்டால் நாடு திவாலாக ஆகிவிடும் என எச்சரித்துள்ளது ரிசர்வ் வங்கி.

இன்னொரு மல்லையாவா? தாங்காதுடா இந்த நாடு..! உஷாரய்யா உஷாரு... ரிஷர்வ் பேங்கு உஷாரு...!

சமீபத்தில் 900 கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டு வெளிநாடு தப்பிச்சென்ற மல்லையா போன்று மீண்டும் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக கொடுத்த கடனை வசூலிக்கும் வழியில் இறங்கியுள்ளது. இந்த கடனை 20% முதல் 30% வரை குறைப்பதற்காக கடன் வாங்கிய நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்துவருவதால் பல கம்பெனி முதலாளிகள் செய்வதறியாது முழிபிதுங்கியுள்ளனர். அரசே தனது சொத்துக்களை முடக்கிவிடுவதற்கு முன்பே தங்களது சொத்துக்களை விற்பனை செய்யத்துவங்கியுள்ளது ரிலையன்ஸ் உட்பட பல நிறுவனங்கள்.

அதிக கடன் பெற்றவர்களின் விபரம் வருமாறு,

1. முகேஷ் அம்பானி - 1.87 லட்ச கோடி
2. அனில் அம்பானி - 1.21 கோடி
3. எஸ்ஸார் குழுமம் (ஷசி, ரவி ரூயா) - 1.01 கோடி
4. கெளதம் அதானி - 96 ஆயிரம் கோடி
5. ஜேய்பி குழுமம் (கவுர்) - 75 ஆயிரம் கோடி
6. ஜி.எம்.ஆர் குரூப் - 42 ஆயிரம் கோடி
7. லேன்கோ குரூப் - 47 ஆயிரம் கோடி
8. வீடியோகான் - 39 ஆயிரம் கோடி
9. ஜி.வி.கே குரூப் - 34 ஆயிரம் கோடி

இப்படியாக பட்டியல் நீளுகின்றது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic