Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Feb 24, 2017

போலிஸ் வாகனத்தில் இருந்த கைதி துடிக்க துடிக்க வெட்டிக் கொலை

நெல்லையில் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட கைதி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


 நெல்லை: பாளையங்கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவர் 13 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட கைதி போலீஸ் வாகனத்தில் இருந்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்தவர் கைதி சிங்காரம். இவர் வழக்குக்காக போலீஸ் வாகனத்தில் தூத்துக்குடி நீதிமனற்த்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீஸார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இந்த வாகனம், நெல்லை கேடிசி நகர் செக் போஸ்ட் அருகே சென்றபோது 13 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வாகனத்தை மறித்தது.

மிளகாய் பொடி நீரை தெளித்து அட்டூழியம்

கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளே இருந்த போலீசார் மீது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை அந்த கும்பல் பீய்ச்சி அடித்தது. இதை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் நிலைகுலைந்து போயினர்.

போலீஸ் துப்பாக்கியால் கண்ணாடி உடைப்பு

அந்த நேரத்தில் காவல்துறை வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல், போலீஸார் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து கண்ணாடியை உடைத்துள்ளனர். பின்னர், உள்ளே இருந்த கைதி சிங்காரத்தை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்துப் போட்ட அந்த கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிங்காரம்

இதையடுத்து, சிங்காரம் உயிரிழந்துவிட்டதாக கருதிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதன் பிறகு, உயிருக்கு போராடிய கைதி சிங்காரத்தை மீட்ட பொதுமக்கள் மற்றும்காவல்துறையினர், தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 கிச்சைப் பலனின்றி பலி

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இருப்பினும் கைதி சிங்காரம் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை

கொலையாளிகளை பிடிக்க தனிப்படை

தாக்குதல் நடைபெற்ற இடத்தை நெல்லை மாநகர காவல் ஆணையர் திருஞானம் தலைமையிலான போலீஸார் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகின்றனர். கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் நடந்த கொலையால் அதிர்ச்சி

பட்டப்பகலில் நடந்த கொலையால் அதிர்ச்சி

போலீசார் வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இருந்த கைதியை, மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் பட்டப்பகலில் கொல்ல முயன்ற சம்பவம் நெல்லை மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


 சிட்டி

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic