ஆனால், அதிமுக தொண்டர்கள் மத்தியில், அதிருப்தி நிலவியது. சசிகலா, அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி சசிகலா, பொது செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து, அதிமுகவினர் ஏராளமானோர், போஸ்டர், பேனர், கட்அவுட் அமைத்தனர். மேலும், தற்போதுள்ள அதிமுக தலைமையின் கீழ் பணியாற்ற விருப்பம் இல்லாமல், தீபா பேரவை துவங்கி செயல்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தரசாமி. ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளராகவும், குடிமங்கலம் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும், எல்.என். புதூர் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவராகவும், வடுகாபாளையம் ஊராட்சி மன்ற தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.இந்நிலையில் சுந்தரசாமி, அவர் வகித்து வந்த சோமவாரப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு தலைவர் மற்றும் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோல், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், காவேரியம்மாள், முத்துலட்சுமி, ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.இதைதொடர்ந்து, கோவை முன்னாள் மேயர் மலரவன் முன்னிலையில், சுந்தரசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஜெ.தீபா பேரவையில் இணைந்தனர். இவர்களை தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் பலர் இணைய இருப்பதாகவும் அவர், தெரிவித்தார்.
No comments:
Write comments