இங்கிலாந்து சினிமாத்துரையை ஊக்குவிக்கும் நிகழ்சி ஒன்றில் பங்கெடுப்பதற்காக மும்பை வந்திருந்த ஐயன் மெக்கல்லன் பிரபல ஆங்கில எழுத்தாளரான ஷேக்ஸ்பியரின் 400வது நினைவு தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்தார். அதன் பிறகு பாலிவுட் நடிகர்களோடு உணவருந்தி கலந்துரையாடலில் ஈடுபட்டார். இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த ஐயன் கூறும்போது "இந்தியாவில் ஓரினச்சேர்கையாளர்களை தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை பயன்படுத்துகின்றனர். இது விந்தையாகவும் அதே சமயத்தில் அநியாயமாகவும் இருக்கிறது. ஓரினச்சேர்க்கை செய்வதில் என்ன தவறை கண்டுவிட்டீர்கள்? ஒரு மனிதன் தன் சுயவிருப்பப்படி நடந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளைப்போல ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் இந்தியா இன்னும் நிறைய வளர வேண்டும்" என்று பேசினார்.
லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்த ஐயன் மெக்கல்லன் தானும் ஒரு ஓரினச்சேர்கையாளர் என்பதை முன்னரே தெரிவித்திருந்தார்.
No comments:
Write comments