கடந்த 2013ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்ற பெண்ணை, மரம் நபர் ஒருவன் துப்பாக்கி மற்றும் கத்தியை கட்டி மிரட்டி, அவரை கத்தியால வெட்டி , அப்பெண் வைத்திருந்த பணம் மற்றும் பையில் இருந்து செல்போன் உள்ளிட்ட சில பொருட்களை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றான்.
குறித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நாட்டையே உலுக்கியது, பாதிக்கப்பட்ட 45 வயதான ஜோதி உதய் என்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார்.
இந்நிலையில், தனிப்படை அமைத்து ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த பொலிசார், மூன்று வருட தேடுதல் வேட்டைக்கு பின் குற்றவாளி சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த மதுக்கரை ரெட்டி என அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணையில் சம்பவத்திற்கு பின்னர் ரெட்டி ஐதராபாத்திற்கு சென்றது தெரியவந்துள்ளது. எனினும், அவன் சித்தூரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளான். இதனை அறிந்த போலீஸார் சமீபத்தில் கிராமத்திற்கு வந்த மதுக்கரை ரெட்டியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
No comments:
Write comments