காஷ்மீர் சட்டசபையில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி, அரசியல் சட்டம் 370-வது விரிவு குறித்து கருத்துக் கூறினார். இதற்கு எதிர்கட்சித் தலைவர் அதிருப்தி தெரிவித்து பிரச்னை எழுப்பினார். அவரைத் தொடர்ந்து அக்கட்சி உறுப்பினர்களும் முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். பதிலுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் முழக்கமிட்டனர். இதனால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அதையடுத்து, சட்டசபை உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நாற்காலி, மேசை, மைக்குகள் என அனைத்தையும் தூக்கி எறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதனைக் கட்டுப்படுத்த சபாநாயகர் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இந்த அமளி காரணமாக சபாநாயகர் அவையை 30 நிமிடம் ஒத்திவைத்தார். உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட போது முதல்வர் மெகபூபா முப்தி சட்டசபையில் இல்லை.
சட்டசபையில்உறுப்பினர்கள் நாற்காலிகளை தூக்கி வீசியதால் சபைக்காவலர் ஒருவர் காயமடைந்தார். உறுப்பினர்களின மோதலால் காஷ்மீர் சட்டசபை போர்க்களம் போல் காட்சியளித்தது.
No comments:
Write comments