ஜார்ஜ் மாற்றம் ? :
தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ள சூழலில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்திற்கு சென்று டிஜிபி ராஜேந்திரன் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து சென்னை கமிஷனராக உள்ள ஜார்ஜ் விரைவில் மாற்றப்பட உள்ளதாகவும், இதற்கான உத்தரவை இன்று மாலைக்குள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறப்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜார்ஜிற்கு பதில் சஞ்சய் அரோரா புதிய கமிஷனராக நியமிக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஜார்ஜ் மாற்றத்திற்கு காரணம் :
எந்த அரசு பதவியிலும் இல்லாத அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, கட்சி அலுவலகத்திற்கு வரும்போதும் போகும்போதும் போக்குவரத்தை நிறுத்தி, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இதனால் ஜார்ஜ், சசிகலாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்கள் எழுந்தது.
இது ஒருபுறம் இருக்க, இன்று சென்னை வரும் கவர்னரை ஓபிஎஸ் சந்தித்து ராஜினாமாவை திரும்பப் பெறுவது பற்றி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஓபிஎஸ்.,க்கு கவர்னர் உத்தரவிடுவார். அவ்வாறு சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும் போது போலீசின் தலையீடு இருக்கக் கூடாது என்பதால் ஜார்ஜ் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சிட்டி
No comments:
Write comments