தெலுங்கானா மாநிலம் நால்கோண்டா மாவட்டத்தில் இருக்கும் கிராமம் முதுந்தாலா. இக்கிராமத்தில் அதிகம் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் கிராமத்தில் உள்ள பெண்கள் ஆண் குழந்தையை பெற்றெடுத்தால் மட்டுமே முழுமையடைவாள் என்ற நம்பிக்க இருந்து வருகிறது. இதனால் அங்கு திருமணமான பெண்கள் தாங்கள் ஆண் பிள்ளைகளை பெற்றெடுக்கும்வரை குழந்தைகளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.
அங்கு லஷ்மி என்ற 73 வயது முதியவர் இருக்கிறார். அவருக்கு மொத்தம் 19 பிள்ளைகள். முதல் 18 குழந்தைகளும் பெண்கள் 19வது குழதைதான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதே போல் மற்றொரு பெண்மணி ராமாவதி 13 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். ஆண் பிள்ளைகளை பெற்றால் தான் பின்னர் காலத்தில் தங்களை வைத்து காப்பாற்றும் என்றும் பெண் பிள்ளைகள் என்றாவது ஒரு நாள் வேறு குடும்பத்திற்கு சென்றுவிடுவர் என கூறுகின்றனர். அப்படி பிறந்த பெண்குழந்தைகளை அவர்கள் கல்வி பயில அனுப்புவதில்லை. ஆண் குழந்தைகளை மட்டுமே படிக்க வைக்கின்றனர்.
No comments:
Write comments