Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Feb 8, 2017

ஓ.பி.எஸ்க்குள் புகுந்த ஜெயலலிதா ஆவி...


எம்.ஜி.ஆர். மீது வைத்திருக்கும் பக்தியில் இவர் அளவுக்கு யாரும் இல்லை. கட்சியை வளர்க்கும் வெறியில், தன்னுடைய மகளையே பறிகொடுத்தவர். ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரையிலும், கட்சியே மூச்சு என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்.

பதவி சுகத்தை அனுபவிக்காத அடிமட்டத் தொண்டர். எம்.ஜி.ஆருக்கு சிலை வைத்து போலீஸாரின் துன்புறுத்தலுக்கு ஆளானவர். புரட்சிப்படை முனியசாமி குறித்து இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் என்கிறார்கள் சிவகாசி பகுதியில் உள்ள அதிமுகவினர்.

ஓ. பன்னீர்செல்வத்தின் இரவு தவம் குறித்தும், அவர் எடுத்த முடிவு குறித்தும், சிலாகித்து நம்மிடம் பேசினார் முனியசாமி. பன்னீர்செல்வம் குறித்த அவரது பார்வை இதோ -

“பணிவுக்குப் பேர் போன பன்னீரை, விசுவாசத்துக்கு விலாசமாக இருந்த பன்னீரையே, படுபாவிங்க பொங்க வச்சிட்டாங்க.

இவன் எம்புட்டு அடிச்சாலும் தாங்குவான்டா.. ரொம்ப நல்லவன்டான்னு சொல்லாமலே அடிச்சிட்டு இருந்தாங்க. ஏச்சோ, பேச்சோ எல்லாத்தயும் அவரு தாங்கிக்கிட்டுதான் இருந்தாரு கை சுத்தமான மனுஷன்னு சொல்ல முடியாது. இவரும் பதவிய வச்சு சம்பாதிச்சு கண்டவங்களுக்கும் கப்பம் கட்டிட்டு இருந்தவருதான்.

கூட்டிக் கழிச்சுப் பார்த்தா சசிகலா கோஷ்டிய விட பன்னீர் தரப்பு எவ்வளவோ மேல். அதுவும் அம்மா செத்த பிறகு, முதலமைச்சரா இருந்துக்கிட்டு, தன்னால முடிஞ்ச அளவுக்கு உழைச்சாரு. என்னதான், கொள்ளைக்கூட்டத்டோடு சகவாசம் வச்சிருந்தாலும், ஒரு கட்டத்துல, நாம ஏன் திருந்தக் கூடாதுங்கிற சிந்தனை வரத்தான் செய்யும்.

அப்படி ஒரு சிந்தனை வந்துதான்.. நிறுத்தி நிதானமா யோசிச்சு.. அம்மா சமாதில போயி உட்கார்ந்துட்டாரு.. அந்த 40 நிமிஷமும் அவரு மனசுக்குள்ள என்னென்ன ஓடியிருக்கும்? விரும்பினோமோ, விரும்பலியோ, காலம் நம்மள அரசியலுக்கு இழுத்துட்டு வந்து, அப்பப்ப முதலமைச்சராவும் ஆக்கி விட்டிருக்கு.

சி.எம். பொறுப்புன்னா சும்மாவா? அப்படி ஒரு பதவில இருக்கிற என்னையே இந்த அளவுக்கு ஆட்டி வைக்கிறாங்கன்னா.. இவங்க கையில தமிழ்நாடு கிடைச்சா என்ன ஆகும்? கட்சிக்குள்ள நடக்கிற அக்கிரமத்த எதிர்க்கிறதுனால, கட்சி உடைஞ்சு, திமுகவோ, யாரோ பலனடைஞ்சிருவாங்கன்னு வெறும் அரசியலை மட்டுமே நினைச்சுக்கிட்டிருந்தா, நாட்டு மக்களோட நெலம என்ன ஆகும்? கட்சியா? நாடான்னு பார்த்தா.. நாடுதானே பெரிசு.. அட, என்கிட்ட இருக்கிற சி.எம். போஸ்ட்ட பிடுங்கிட்டாங்க.. அது பொறுக்காமத்தான் கட்சிய காட்டிக் கொடுத்துட்டேன்னு பேச்சு வரத்தான் செய்யும்.

மோடி சொல்லித்தான் இத பண்ணுறாரு. திமுக தூண்டிவிட்டுத்தான் இதெல்லாம் நடக்குதுன்னு பழி நம்ம விழத்தான் செய்யும். இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா? சி.எம்.மா இருந்துக்கிட்டு பட்ட அவமானத்த விட இது ஒண்ணும் பெரிசில்ல. யாரு என்னமும் சொல்லிட்டுப் போகட்டும். நல்ல சிந்தனைன்னு ஒண்ணு வந்திருச்சு. அதை செயல்படுத்தலைன்னா.. நம்ம மனசாட்சியே நம்மள தூங்க விடாது.

வாங்க தம்பிங்களான்னு பிரஸ்ஸ கூப்பிட்டு பேட்டி கொடுக்கிறத விட, அம்மா சமாதில போயி உட்கார்ந்துக்கிட்டு, மொத்த கவனத்தையும் தன் மேல பதிய வச்சு, அப்புறம் பிரஸ்காரங்களே வற்புறுத்துற நிலைமையை உண்டாக்கி, குரல்ல பரிதவிப்போடு பேட்டி கொடுத்தாரு பாருங்க. தமிழ்நாடே அசந்திருச்சுல்ல.

கீ கொடுக்கிற பொம்மை மாதிரில்ல இருக்காருன்னு சொன்னவங்களே, மிக்சர்ன்னு கேலி பேசினவங்களே, அய்யா உங்கள பத்தி முழுசும் தெரியாம சொல்லிட்டோம்னு கன்னத்துல போட்டுக்கிற ஒரு நிலைமையை உருவாக்கினாருல்ல. இவரோட அரசியல் சாதுர்யத்தை நாக்கு மேல பல்ல போட்டு இனிமே யாரும் குறை சொல்ல முடியுமா?

தனியாளா நின்னு போராடுவேன்னு சொல்லுற அளவுக்கு பன்னீருக்கு தைரியம் வந்திருச்சு. அதிமுகவுல ஜெயலலிதாவுக்கு அடுத்து சொல்லிக்கிற மாதிரி தலைவர் யாருமில்லைன்னாங்க. அந்த நினைப்புலதான், சசிகலா வந்தா கட்சிய காப்பாத்துவாருன்னு கால்ல போயி விழுந்தாங்க. பன்னீரும் ஸ்டாலினும் சட்ட மன்றத்துல ஒருத்தர ஒருத்தர் பார்த்து சிரிச்சிக்கிட்டாங்களாம். இதைப் போயி உலக மகா குற்றம்னு சொல்லுது சசிகலா. அந்தம்மா லட்சணம் என்னன்னு இப்ப வெட்ட வெளிச்சமாயிருச்சு. பன்னீரோட பொறுமையும் திறமையும் இப்ப மக்கள் மன்றத்துல வெளிப்பட்டிருக்கு.

விசுவாசியாலும் விஸ்வரூபம் எடுக்க முடியும்னு நிரூபிச்சிருக்காரு பன்னீர். என்ன நடந்தாலும் சரி, பன்னீரைத்தான் அடிமட்டத் தொண்டன் ஏத்துக்குவான். சத்தியமா சொல்லுறேன். சசிகலாவ ஒருக்காலும் ஏத்துக்கவே மாட்டான். இன்னொனு சொல்றேன் என் அடிமனசுல இருந்து சொல்றேன் எம்.ஜி.ஆரும் சாகல, ஜெயலலிதாவும் சாகல. பன்னீருக்குள்ள புகுந்துட்டாங்க” என்றார் ஆணித்தரமாக.

அடிமட்டத் தொண்டர்கள்தானே அரசியல் கட்சியின் அஸ்திவாரமாகத் திகழ்கிறார்கள்!

நன்றி: நக்கீரன்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic