Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Feb 8, 2017

திமுகவை சீண்டவேண்டாம் - சசிகலாவை எச்சரிக்கும் ஸ்டாலின்


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் 40 நிமிடம் தியானம் செய்த பிறகு முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் நடைபெற்றுவரும் செயல்கள் குறித்தும், சசிகலாவுக்கு எதிராகவும் பல அதிரடி கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும் மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் வாங்கிவிட்டு தானே முதல்வராக தொடருவேன் என்று தெரிவித்தார். இதையெடுத்து நேற்று இரவே போயஸ் கார்டனிலிருந்து அதிமுக அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி விவாதித்தார் சசிகலா. உடனடியாக கட்சி பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர் செல்வத்தை நீக்குவதாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா பன்னீர் செல்வம் ஸ்டாலினுடன் சிரித்து பேசுகிறார். இதற்கு பின்னால் திமுக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சசிகலா பேட்டி குறித்து சூடான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக மீது பாயாதே! திராணி இருந்தால் ஓ.பி.எஸ்ஸுக்கு பதில் சொல் என்று காட்டமாக கேட்டுள்ளார். அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது

"எதிர்கட்சி தலைவரைப்பார்த்து முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சிரித்து பேசி கொண்டிருந்தார்" என்று அதிமுகவின் அதிரடி வரவான பொதுச்செயலாளர் திருமதி சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது அவர் ஏற்கனவே நான் பினாமி அல்ல என்று சொத்து குவிப்பு வழக்கில் வைத்த உதவாக்கரை வாதம் போன்று இருக்கிறது. நினைத்த வேகத்தில் குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆக முடியவில்லை என்ற ஏக்கத்தில் எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற போக்கில் திமுக மீது போலி விமர்சனத்தை வைத்துள்ளதாகவே கருதுகிறேன். அதிமுகவிற்குள் நடக்கும் கேலிக் கூத்துக்களும், அரசியல் கோமாளித்தனங்களுக்கும் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை சசிகலா நடராஜன் அறிய வேண்டும் என்றால் அவர் முதலில் தமிழக அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.

மாண்புமிகு ஆளுனர் அவர்களால் நியமிக்கப்பட்ட முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களை போயஸ் தோட்டத்திற்கு வர வைத்து, இரண்டு மணி நேரம் மிரட்டி, ராஜினாமா கடிதம் பெற்ற சசிகலா நடராஜன், அதிமுக தொண்டர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க இப்படி திமுக மீது பழி போடுவது அரைவேக்காட்டுத்தன அரசியல். திமுகவை பொறுத்தவரை சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாகவும், வெளியில் அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்கும் கட்சியாகவும் மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதனால்தான் முதலமைச்சராக அம்மையார் ஜெயலலிதா அவர்கள் பதவி ஏற்ற போது அந்த நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் பங்கேற்றேன். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களே அதற்காக நன்றி தெரிவித்தத்தை தோழி என்று சொல்லிக்கொள்ளும் சசிகலா நடராஜனுக்கு தெரியாமல் இருப்பது எப்படி? ஏன் சட்டமன்றத்திலேயே நேருக்கு நேர் நானும் முதலைமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களும் பரஸ்பரம் வணக்கம் செலுத்தி சிரித்துக்கொண்டிருக்கிறோம். அம்மையார் ஜெயலலிதாவை பார்த்து திருமதி சசிகலா இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க முடியுமா?

அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்து அவர் தீடீரென மறைந்தவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது, அம்மையார் ஜெயலலிதாவின் பூத உடலின் அருகில் இருந்த முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறியது எல்லாமே திமுக கடைபிடிக்கும் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடு மட்டுமே!

அவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட பிறகும், அதே அரசியல் நாக்ரீகத்தை சட்டமன்றத்திலும் வெளியிலும் திராவிட முன்னேற்ற கழகம் முன்னெடுத்துச் சென்றது. அதிமுகவிற்குள் சிரிப்பாய் சிரிக்கும் காட்சிகளுக்கு என்னை பார்த்து முதலமைச்சர் சிரித்ததுதான் காரணம் என்று கூறுவது விசித்திரமானது, வெட்க கேடானது. அதைவிட தனக்கு எடுபிடியாக இருக்கும் பாராளுமன்ற துணை சபா நாயகர் தம்பிதுரை மூலமாக ஒரு பேட்டி கொடுக்க வைத்து, டெல்லி பயணம் என்றெல்லாம் கதை அளப்பது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் கேவலாம செயல் என்பதை சசிகலா உணர வேண்டும்.

சசிகலாவிற்கு திராணி இருந்தால் பன்னீர் செல்வத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லட்டும். அதைவிட்டுவிட்டு திமுகவை சீண்ட வேண்டாம். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic