தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி நடத்திய கருத்துக் கேட்பு பாதியில் திடீரென்று நிறுத்தப்பட்டது.
நாகை: நாகை தொகுதி எம்எல்ஏவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி, தொகுதி மக்களின் கருத்தைக் கேட்க தனது அலுவலகத்தில் கருத்துப் பெட்டி ஒன்றை வைத்தார். மக்கள் தங்களது கருத்துக்களை சொல்ல ஒன்று கூடிய போது, திடீரென்று பாதியில் நிறுத்தப்பட்டது.
அதிமுகவின் பிளவு ஏற்பட்டுள்ளதால் தமிழக முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதா அல்லது அதிமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் சசிகலாவை ஆதரிப்பதா என்று தொகுதி மக்களிடம் கருத்துக் கேட்புக்கு நாகை எம்எம்ஏ ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான தனது அலுவலகத்தில் கருத்துப் பெட்டி ஒன்றை அவர் வைத்தார்.
இதனால் குஷியான நாகை தொகுதி மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க அலுவலகம் வந்து கருத்துப் பெட்டியில் தங்களது விருப்பத்தை எழுதி போட்ட வண்ணம் இருந்தனர். நேரம் நேரம் அதிகரிக்க அதிகரிக்க கூட்டம் அதிகமாக கூடியது.
இந்நிலையில், திடீரென்று கருத்து கேட்பு நிறுத்தப்பட்டது. எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்த தமிமுன் அன்சாரி எம்எல்ஏவும் அலுவலகத்தில் இருந்து எழுந்து சென்றுவிட்டார். பின்னர், கூடி இருந்த கூட்டத்தை அகற்றிய போலீசார் அலுவலகத்தை பூட்டினார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு நாகை தொகுதியில் வெற்றி பெற்றவர். அதிமுகவில் இப்படி ஒரு இக்கட்டான சூழல் இருக்கும் போது, மக்கள் கருத்தை கேட்க விரும்பிய அவரை யார் மிரட்டினார்கள்? எதற்காக அவர் பாதியில் கருத்துக் கேட்பை நிறுத்திவிட்டு புறப்பட்டார் என்பது குறித்து ஏமாற்றத்துடன் திரும்பிய நாகை தொகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சிட்டி

No comments:
Write comments