Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Feb 14, 2017

அன்போடு வரவேற்கத் தயாராகும் பரப்பன அக்ரஹாரா சிறை!

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அளித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்படுவார் என்பதால் அதற்காக சிறை அறைகள் தயாராகி வருகிறது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 21 ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. அதில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 4 வாரத்தில் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இதனையடுத்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே, கர்நாடக மாநிலத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இதே வழக்கில் நீதிபதி குன்ஹா ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் சிறை தண்டனை வழங்கிய போது, இதே பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் தான் அடைத்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்டி

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic