தமிழகத்தில் தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. ஆளும் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆகிய இருதரப்பினரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ஆலோசனை நடத்தினர். சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரியும், ஆளுநர் இதுவரை அழைக்கவில்லை. இதனால் பொறுமையிழந்த சசிகலா, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
இதற்கிடையில் உடனடியாக ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு, ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு நேற்று கடிதம் எழுதினார். ஆனால் ஆளுநர் மாளிகையில் இருந்து, எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து ஆளுநரை இன்று சந்திக்க, சசிகலா மீண்டும் நேரம் கேட்டுள்ளார். ஒருவேளை இன்று நேரம் ஒதுக்கப்படாத சூழல் ஏற்பட்டால், உடனடியாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Write comments