ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்தின் விளைவாக ,தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் வகையில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில்,அம்மாநில பாரம்பரிய விளையாட்டான கம்பாலா விளையாட்டின் மீதான தடையை நீக்கி அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன.
இந்த கோரிக்கைகளினால் கர்நாடக அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது.எனவே தமிழகத்தை போல்,கம்பாலா விளையாட்டை அனுமதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவெடுத்தது.இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளியன்று,கம்பாலா அவசரச் சட்ட மசோதா கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று கூடிய கர்நாடக சட்டசபையில்,பெரும்பான்மை ஆதரவோடு கம்பாலா சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பாரம்பரியமாக கம்பாலா விளையாட்டு நடைபெற்று வரும் கர்நாடக கடற்கரை பிராந்தியம் மற்றும் தென் கர்நாடக மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.a
No comments:
Write comments