கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு பாதிக்கப்பட்ட நபர்களின் முன்னிலையில் கதற கதற சித்ரவதை அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் உமாபாரதி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சகர் என்ற இடத்தில் கடந்த ஆண்டு காரில் சென்றவர்களை ஒரு கும்பல் மடக்கியது. அதில் இருந்த ஆண்களை கட்டிப்போட்டு விட்டு 13 வயது சிறுமி உள்ளிட்ட பெண்களை மட்டும் தனியாக கடத்தி சென்றது. பின்னர் அவர்களை அந்த கும்பல் கற்பழித்தது.
இது உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மீது உத்தரபிரதேச அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் மத்திய அமைச்சர் உமாபாரதி ஆக்ராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அவர் கடுமையாக பேசினார்.
இந்த மாநிலத்தில் புலந்த்சகரில் நடந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் சமாஜ்வாடி அரசு தோல்வி அடைந்து விட்டது. பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபரின் முன்னிலையிலேயே அவர்களை சித்ரவதை செய்ய வேண்டும்.
தலைகீழாக தொங்க விட்டு அவர்களுடைய உடலில் உள்ள தோல் உரியும் வரை அடிக்க வேண்டும். அதில் ஏற்படும் புண்களில் உப்பையும், மிளகாய் பொடியையும் தூவ வேண்டும். அவர்கள் தங்கள் உயிருக்காக கெஞ்சும் வரையில் கதற, கதற சித்ரவதை செய்ய வேண்டும்.
நான் மத்திய பிரதேசத்தில் முன்பு முதலமைச்சராக இருந்த போது, பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். அப்போது பொலிசார் இது மனித உரிமை மீறல் என்று என்னிடம் கூறுவார்கள். அதற்கு நான் இவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல, தீய சக்திகள். எனவே, சித்ரவதை செய்யுங்கள் என்று கூறுவேன். அது மட்டுமல்லாமல் அந்த குற்றவாளிகளை சித்ரவதை செய்யும் காட்சியை பாதிக்கப்பட்ட பெண்களை பார்க்க சொல்வேன். அப்போது தான் அந்த பெண்களுக்கு நிம்மதி ஏற்படும் என்றார். அமைச்சர் உமாபாரதியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

No comments:
Write comments