Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Feb 12, 2017

நடிகர் லாரன்ஸ் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டாரோ..?


ஜல்லிக்கட்டு போராட்டம் ஜனவரி 12ஆம் திகதி தொடங்கியது. மாணவர்கள் அறவழி போராட்டம் நடத்த போகிறார்கள் என்று ஆரம்பித்தபோது, எப்படி ஆதரவு இருந்தது என்று தெரியாது.

ஆனால், இரண்டாம் நாளில் இருந்து அவர்களுக்கு உதவிகள் வர ஆரம்பித்தன. யாரும் யாரையும் கேட்காமல், தங்களால் முடிந்த அளவு, அது 10 பேருக்கு சாப்பாடோ, 20 பேருக்கு டீயோ கொண்டு வந்து கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.இந்த மாணவ சக்திக்கு சரவணபவன், ஆனந்தபவன் முதல் சின்ன பெட்டிக்கடை வரை எல்லோரும் உதவி இருக்கிறார்கள்.

அது தொடங்கி மூன்றாம் நாள் வந்தார் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு வந்தார். வந்தவர் இந்த போராட்ட இளைஞர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை தந்து உணவு மற்றும் பிற செலவுகளை ஏற்பேன் என்று சொன்னார். ஆனால் ராகவா லாரன்சுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று சிலர் சொல்லியது உண்மை என்பது போல, இளைஞர்கள் கட்சிக்கு நான் தலைமை தாங்குகிறேன் என்று ராகவா லாரன்ஸ் வெளிப்படையாக சொன்னார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு,’மனைவி செயினை அடமானம் வச்சி சோறு போட்டேன்னு’ கொதிச்சி பேசினார். அதற்கு மாணவர்கள்,’ ராகவா லாரன்ஸ் போல, யாரும் நான் சோறு போட்டேன், சோறு போட்டேன் என்று பிரஸ் மீட்டில் எல்லாம் பேசிக்கொண்டு இல்லை.

இந்த மாணவ சக்தியை தனக்கு பயன்படுத்தி அரசியல் களம் புக வேண்டும் என்று முடிவு செய்த ராகவா லாரன்ஸ் மூன்றாம் நாள் உள்ளே வந்தார்.1 கோடி வரை உணவு,தண்ணிக்கு செலவு செய்கிறேன் என்றார். கடற்கரையிலே இருக்க ஆரம்பித்தார். அவர், அவர் சம்பந்தப்பட்டவர்கள் வந்தபிறகு, அவரின் கட்டுப்பாட்டுக்குள்ளே எல்லாம் போயிட்டு.

இதை எல்லாமே நாங்கள் பொறுத்துக்கொண்டோம், ஆனால், பொண்டாட்டி செயினை அடகு வச்சி சோறு போட்டேன், போட்டேன்னு எல்லா பிரஸ் மீட்டிலேயும் பேசறது கேக்க கஷ்டமா இருக்கு. எங்களுக்கு அது அசிங்கமா இருக்கு.இவரு சோறு போடலைன்னாலும், போராட்டம் நடந்து இருக்கும் .” என்று பெரும்பான்மையான மாணவர்கள் குழு தெரிவிக்கிறது.

அது மட்டும் இல்லாமல், போராட்டத்தின் கடைசி நாள் வன்முறையின்போது லாரன்ஸ் சமூக விரோதிகள் போராட்ட களத்தில் புகுந்து விட்டார்கள் என்று சொன்னார்.இதையே தான் பாஜகவும் சொன்னது.

இப்போது சமூக வலைதளத்தில் லாரன்ஸ் பாஜக தலைவர் பொன்னர் அவர்களை சந்திக்கும் ஸ்டில்லை வெளியிட்டு,’சமூக விரோதிகள் உள்ளே வந்துட்டாங்கன்னு போராட்டத்தை ஒடுக்கிய பாஜக அரசுக்கே நன்றி சொல்லும் லாரன்சு.இவரையா நம்புறீங்க …?” என்று ஒரு பதிவு வைரலாகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic