சென்னை: டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக் கழக முன்னாள் மாணவர் தலைவர் கன்னையாகுமார் மீதான தேசதுரோக குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் போலீசார் திணறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் (ஜே.என்.யூ) கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக தேசதுரோக முழக்கங்களை சிலர் எழுப்பினர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் (ஜே.என்.யூ) கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக தேசதுரோக முழக்கங்களை சிலர் எழுப்பினர்.
தேசதுரோக வழக்கு
இந்த வழக்கில் கன்னையாகுமார், உமர் காலித் மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் மீது தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் அனைவரும் விடுதலையாகினர்.
வீடியோ காட்சிகள்
இதனிடையே இந்த வழக்கில் கன்னையாகுமார் மீதான தேச துரோக குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாமல் போலீஸ் திணறுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 40 வீடியோ காட்சிகளை டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகையில் தாக்கல் சேர்த்துள்ளனர்.
நீதிமன்றமே முடிவு செய்யலாம்
இதில் தேசதுரோக முழக்கங்கள் எழுப்பப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் கன்னையா மீது தேசதுரோக குற்றச்சாட்டை பதிவு செய்வது தொடர்பாக நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்ற முடிவுக்கும் போலீஸ் வந்துள்ளதாம்.
காஷ்மீரிகள்
இந்த கூட்டத்தில் வெளிநபர்கள் 9 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருமே காஷ்மீரைச் சேர்ந்தவர். மொத்தம் 140 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இவர்களில் 9 பேர் யாரென்றே அடையாளம் தெரியாமல் முழிக்கிறதாம் டெல்லி போலீஸ்
சிட்டி
No comments:
Write comments