தமிழ் திரையுலகில் தான் சந்திக்க நேரிட்ட பாலியல் தொல்லைகள் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வெளிப்படையாகப் பேட்டி அளித்துள்ளார்.
கிட்டத்தட்ட பல வருடங்களாக பாலியல் பாகுபாட்டை வெளிப்படுத்தும் கேலி கொடுமைகளை நான் திரைத்துறையில் அனுபவித்துள்ளேன். திரைப்படத்தில் நடிக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் கூட பாகுபாடு உள்ளது, இதில் எங்கே சம உரிமை உள்ளது?
மலையாள இயக்குநர் ஒருவர் தமிழிலும் படங்கள் இயக்கியுள்ளார். அவர் பாலியல் ரீதியாக எனக்கு பல தொல்லைகள் தர முயற்சி செய்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், என்னை படப்பிடிப்புத் தளத்தில் அவமானப்படுத்தினார். சமீபத்தில் ஒரு இயக்குநரின் உதவியாளர் ஒருவர் என்னிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் பேசிக் கொண்டிருந்த போது அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து மெல்லப் பேசத் தொடங்கினார், முதலில் எனக்கு அது புரியவில்லை. பின்பு அவர் பேசிய அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த உண்மை தெரிந்ததும் நான் அதிர்ச்சி அடைந்து, உடனே அவரை வெளியேறச் சொன்னேன். இது போன்ற திரைப்பட இயக்குனர்கள் திரையுலகில் உள்ளார்கள். ஆனால் நாம் அவர்களை பற்றி பேசுவதே இல்லை.
புத்திசாலியான மற்றும் நியாயமாக சம்பளம் கேட்கும் பெண்களை எந்த இயக்குனர்களும் விரும்புவதில்லை. இது குறித்து பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளுக்கு தமிழ்த் திரையுலகில் உள்ள ஆண்களும் பேச வேண்டும், இது எனது கோரிக்கை என்று கூறியுள்ளார்.
No comments:
Write comments