ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதி அதிமுக கோட்டையாக இருந்து வந்தது.
ஆனால் அதிமுகவின் வாக்குகள் சசிகலா, ஓபிஎஸ், தீபா என 3 ஆக பிரிந்து கிடக்கிறது. இது எதிர்க்கட்சியான திமுகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
அதிமுக எதிர்ப்பு அலை
இத்தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட மறைந்த எஸ்.பி. சற்குணம் 2 முறை வெற்றி பெற்றிருக்கிறார். அந்த 2 முறையுமே கூட அதிமுக எதிர்ப்பு அலையால்தான் அவர் வெல்ல முடிந்தது.
வாக்குகள்ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமான அளவுக்கு நாடார் சமூகத்தினர் வசிக்கின்றனர். இதுவும் எஸ்.பி. சற்குணத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக கூறலாம். இதனால்தான் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து எஸ்.பி. சற்குணத்தின் மருமகள் சிம்லா முத்துசோழனை களமிறக்கியது திமுக. ஆனால் அவர் தோல்வி அடைந்தார்.
தமிழிசை போட்டி?
தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில் நாடார் சமூகத்தின் வாக்குகளை குறிவைத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில்...
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அங்கு 19,167 வாக்குகளை மட்டுமே தமிழிசை சவுந்தராஜன் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்டி

No comments:
Write comments