Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 14, 2016

ஜூலை 1ல் கபாலி வர்றாரு - சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் 'மகிழ்ச்சி'...!!!


சினி ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பின் விடை இதோ வந்துவிட்டது. கபாலி படத்திற்கான ரிலீஸ் தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் இயக்கும் படம், தெறி படத்தைத் தொடர்ந்து தாணு தயாரிப்பு, சந்தோஷ்நாராயணன் இசை, ஒளிப்பதிவாளர் முரளி, பிரவீன் கே.எல். எடிட்டிங், இதையெல்லாம் தாண்டி ரஜினியின் மாஸ் தோற்றம் என்று கபாலி உச்சகட்ட எதிர்ப்பார்ப்புடன் ஜூலை 1ம் தேதி வெளியாகவிருக்கிறது.
இப்படத்தில் மலேசியாவின் டான் கதாபாத்திரத்தில் ரஜினி  நடித்திருக்கிறார். தன்ஷிகா, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் கபாலி படத்தின் டீஸர் வெளியாகி வைரலோ வைரல் ஹிட் அடித்தது. கபாலிடா.. நெருப்புடா.. என்ற வசனமே இன்றைய ரசிகர்களின் யூத் ஃபார்முலா.. ஸ்டைலிஷ் ரஜினியைக் காண  ஜூலை 1ம் தேதி வரை காத்திருப்போம்.....!
மகிழ்ச்சி....

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic