Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 14, 2016

ஓடும் பேருந்தில் ஒளிபரப்பான ‘தெறி’: விஷால் நடவடிக்கையால் ஓட்டுநர் கைது!


பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில், விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தெறி படம் ஒளிப்பரப்பட்டுள்ளது. அதைப் பார்த்த பயணிகளில் ஒருவர் இந்தச் செய்தியை நடிகர் விஷாலிடம் போன் மூலம் தெரிவித்துள்ளார். (விஷாலின் தொலைப்பேசி எண்ணை இணையத்தளத்திலிருந்து கண்டெடுத்துள்ளார்.)
இந்தச் செய்தியை உறுதி செய்ய, பேருந்தில் தெறி படம் ஒளிபரப்பாவதை செல்போனில் வீடியோவாக எடுத்து தன்னுடைய மொபைலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார் விஷால். அதேபோல அந்தப் பயணியும் வீடியோ எடுத்து விஷாலுக்கு அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, திருட்டு விசிடி தடுப்புச் சிறப்பு ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் இதைப் பற்றி புகார் அளித்துள்ளார் விஷால். அந்தப் புகாரின் பேரில், ஆய்வாளர்கள் இருவர் சென்னை-மதுரவாயில் அருகே வந்துகொண்டிருந்த அந்தப் பேருந்தை மடக்கிப் பிடித்தார்கள். இதனையடுத்து, தெறி படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic