மே 16 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்கவிருப்பதால் அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் 16-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவித்துள்ளன. இதுபோல் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஓட்டுப்போடுவதற்கு வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அனைத்து நடிகர், நடிகைகளும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments