Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 14, 2016

கேரள சட்டசபை தேர்தல் : மோகன்லால் பிரச்சாரத்தால் நடிகர் சங்கத்தில் குழப்பமா?


கேரள சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் பத்தனாபுரம் தொகுதியில் நடிகர் ஜெகதீஷ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து கம்யூனிஸ்டு கூட்டணி சார்பில் நடிகர் கணேஷ்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். இதே தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக இன்னொரு நடிகர் பீமன்ரகு களமிரங்கி உள்ளார்.ஒரே தொகுதியில் 3 நடிகர்கள் போட்டியிடுவதால் இவர்களை ஆதரித்து மலையாள நடிகர்கள் யாரும் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம் என மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் கணேஷ் குமாரை ஆதரித்து, நடிகர் மோகன்லால் பத்தனாபுரம் தொகுதியில் பிரசாரம் செய் தார். இதற்கு நடிகர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினரான நகைச்சுவை நடிகர் சலீம்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். சங்கத்தில் இருந்தும் ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் மலையாள நடிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோகன்லால் பிரசாரம் செய்தது சரியா? தவறா? என நடிகர்கள் மத்தியில் விவாதம் நடக்கிறது.

நடிகர் ஜெகதீஷ் கூறும் போது, கணேஷ்குமாருக்கு ஆதரவாக மோகன்லால் பிரசாரம் செய்தது என்னை வேதனைப்படுத்தியது. இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார். நடிகர் முகேஷ் கூறும் போது, பத்தனாபுரம் தொகுதியில் மோகன்லால் பிரசாரம் செய்ததில் தவறு ஏதும் இல்லை. சலீம்குமார் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் ஆவார். எனவேதான் அவருக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. யாரை ஆதரித்து பிரசாரம் செய்வது என்பது அவரவர் உரிமை. அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றார்.
இந்த பிரச்சினை பற்றி மலையாள நடிகர் சங்க தலைவரும், எம்.பி.யுமான இன்னசென்ட் கூறியதாவது:-

தேர்தலில் பிரசாரம் செய்யக்கூடாது என்று எந்த நடிகர்களுக்கும் ‘அம்மா’ உத்தரவிடவில்லை. நடிகர்களின் அரசியல் ஈடுபாட்டில் நடிகர்கள் சங்கம் தலையிடாது. நண்பர்கள் என்ற முறையிலோ, அரசியல் ரீதியாகவோ யாரும், யாருக்கும் பிரசாரம் செய்யலாம். சலீம்குமார் நடிகர் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் விரும்பினால் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மலையாள நடிகர் சங்கத்தினர் மோகன்லாலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அவர், கம்யூனிஸ்டு வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தது பற்றி காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் மோகன்லால் ராணுவத்தில் கவுரவ கர்னல் பதவி வகித்து வருகிறார். அவர், எப்படி? ஒரு கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்யலாம்? என்று கேள்வி எழுப்பியதோடு, இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகாரில் கொடிக்குன்னில் சுரேஷ் வலியுறுத்தி உள்ளார்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic