சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள உயரில் பூங்காவில் கொரில்ல குரங்கின் கூண்டில் புகுந்த சிறுவனின் உயிரைக்காப்பாற்ற பூங்கா அதிகாரிகள் கொரில்லாவை சுட்டுக்கொன்றனர்.
இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் கண்டனத்தை பெற்று வருகிறது. அமெரிக்காவின் ஒஹையோ மாகாணம், சின்சினாட்டி நகரில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இதில் ஹராம்பே என்னும் பெயர் சூட்டப்பட்ட 17 வயது ஆண் கொரில்லா குரங்கு உள்ளது. அக்குரங்கின் தடுப்புச்சுவரில் இருந்த சிறு இடைவெளி வழியாக ஒரு 5 வயது சிறுவன் கொரில்லாவின் கூண்டுக்குள் நுழைய அச்சிருவனை கொரில்லா தூக்கிச்சென்றது.
கொரில்லாவிடம் சிக்கிக் கொண்ட 4 வயது சிறுவன்! (படபடக்க வைக்கும் திக்.. திக்.. வீடியோ)
அச்சிருவனை கொரில்லாவிடமிருந்து காப்பதற்காக பூங்கா அதிகாரிகள் கொரில்லாவை சுட்டுக்கொன்றனர். இது உலகம் முழுவதும் கண்டனக்குரல் எழுந்துள்ளது. சிறுவனை காப்பாற்ற வேண்டுமானால் கொரில்லாவிற்கு மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தி குழந்தையை காப்பாற்றியிருக்கலாம். எதற்காக அதை குண்டுகளால் சுட்டு கொல்ல வேண்டும்? குழந்தைகளை, சிறுவர்களை பூங்காவிற்கு அழைத்து வரும் பெற்றோர்கள் அவர்களை உரிய முறையில் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அப்படி செய்யாதது அவர்களின் தவறே ஆகும். இதனால் வாயில்லா மிருகங்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சமூக வலைத்தளங்களில் அதிக அளவு கருத்துக்கள் பரிமாறப்பட்டுவருகிறது.
மேலும் அச்சிறுவனை பாதுகாப்பாக தங்களிடம் வைத்துக்கொள்ள தவறிய பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சிங்கத்திற்கு தன்னை உணவாக்க நிர்வாணமாக குதித்த வாலிபர் - சிலி நாட்டில் பரபரப்பு
மிருகங்கள் இயற்கை வாழ்வை மட்டுமே நடத்துகின்றனர். ஒருபோதும் எந்த மிருகமும் இயற்கைக்கு எதிராக செயல்படுவதே இல்லை, ஆனால் இரண்டு கால் மிருகம் (மனிதன்) தான் இயற்கைக்கு மாறாக தவறு செய்கின்றான். நியாயப்படி அவனே தண்டிக்கப்பட வேண்டும் ஆனால் அப்போதும் வாயில்லா மிருகங்களே தண்டிக்கப்பட்டு வருகிறது என்று சமூக வலைத்தளங்களில் கருத்து ஒன்று வெளியானது.
No comments:
Write comments