ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இந்தியாவில் பலமுறை கால்பதிக்க முயன்றும் தோல்வியே அடைந்துள்ளது. இருந்தபோதிலும் அவ்வமைப்பின் கோட்பாடுகளால் 400 முதல் 500 வரை இந்திய இளைஞர்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து தீவிரவாக விசாரித்தும் கண்காணித்தும் வருவதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியா ஈராக் ஆகிய இரு நாடுகளை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு உலகம் முழுவதும் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவருகிறது. அவர்கள் கிலாபா என்று அழைக்கப்படக்கூடிய இஸ்லாமிய சட்டமான ஷாரியா படி ஆட்சி நடத்தப்போவதாக பிரகடனப்படுத்தி செயல்பட்டு வருகின்றனர். இதனால் ஈர்க்கப்பட இந்தியாவின் பல இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக அவர்களை தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர்.
மேற்கத்தியா நாடுகளால் இஸ்லாமியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் உலகம் முழுவதும் நடைபெறும் சமூக சீர்கேடுகளுக்கு இவ்வமைப்பு நல்ல தீர்வை வழங்கும் என்றும் இந்த இளைஞர்கள் பெரிதும் நம்புவதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃப்ரீயா பதிவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் பயன்பாட்டுகளை வைத்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர்களை அவர்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்துவருகிறார்கள். அவ்வாறு தொடர்புகொள்ள முயன்ற 400கும் மேற்பட்ட இளைஞர்களை கைது செய்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்து தேவையானவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி அனுப்பி வைப்பதாகவும் பின்னரும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்துவருவதாகவும் உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதற்கு முன்பு பாகிஸ்தானில் மையகமாக கொண்டு செயல்பட்டு வந்த தீவிரவாத அமைப்புகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வந்தவர்கள் தற்போது ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஜம்மு கஷ்மீர், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களில் உள்ள இளைஞர்களே அதிகம் இதில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
No comments:
Write comments