இந்து முஸ்லிம் தலைவர்கள் ஒன்றினைந்து பாபரி மஸ்ஜித் - இராம ஜன்ம பூமி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலமாக சுமூக முடிவு எடுக்கப்பட வேண்டுமென இந்து அமைப்பான ஆல் இந்தியா அகாரா பரிஷத்தில் புதிய தலைவர் மஹாந்த் நரேந்திரகிரி தெரிவித்துள்ளார்.
நரேந்திரகிரி நேற்றைய தினம் பாபரி மஸ்ஜித் வழக்கு தொடுத்த ஹாசிம் அன்சாரியை சந்தித்தார். சாதுக்கள் மற்றும் இந்து மத மகான்களோடு நரேந்திரகிரி அன்சாரியை சந்தித்து அரை மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகமான முடிவு கிடைப்பதற்காக எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்துவருகிறோம். பாபரி மஸ்ஜித் ராம ஜன்ம பூமி தொடர்பான முடிவு நல்லதாகவும், இரு சமூக மக்களும் ஏற்கக்கூடிய அளவில் இருக்க வேண்டுமென்றே நாங்கள் விரும்புகிறோம். அதே சமயத்தில் காலம்தாழ்த்திக்கொண்டே போகாமல் ஒவ்வொரு நாளும் இவ்வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என்றார் நரேந்திரகிரி.
நாங்களும் பேச்சுவார்த்தைக்கு எப்பொழுதுமே தயாராக இருக்கிறோம். அதன் மூலம் சுமூக உடன்பாடு ஏற்பட வேண்டுமென்பதையே நாங்களும் விரும்புகிறோம், இதனா இரு சமூக மக்களும் மன நிம்மதியாக, சந்தோஷமாக வாழ முடியும் என்று அன்சாரி கூறினார்.
பாபரி மஸ்ஜித் இராம ஜன்மபூமி விவகாரம் சுமூகமாக முடிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இப்பிரச்சனையை வைத்து அரசியல் நடத்துபவர்களே இவ்விவகாரம் நீண்டுகொண்டே போவதற்கான காரணம் என்றே தெரிகிறது.
No comments:
Write comments