Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 31, 2016

கருப்பு பணம் விவகார மத்திய அரசு வழங்கும் கடைசி கெடு



இந்தியாவில் கருப்பு பணம் வைத்திருப்போர், கணக்கில் காட்டப்படாத தங்களது சொத்து விபரங்களை தெரிவிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்நிய முதலீடுகளை கவர்வதற்காக அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள அருண் ஜேட்லி அங்கு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவில் கருப்பு பணம் வைத்திருப்போர், கணக்கில் காட்டாத சொத்துக்களை வைத்திருப்போர் 45% வரி மற்றும் அபராதம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதிலிருந்து தப்பித்து கொள்வதற்காக கால அவகாசம் ஜூன் 1 முதல் துவங்கிறது. செப்டம்பர் இறுதிவரை இந்த அவகாசம் வழங்கப்படும் அதற்குள் கருப்புப் பணம் தொடர்பான அனைத்து விபரங்களையும் தெரிவித்துவிடவேண்டும், இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மத்திய அரசு கடந்த முறை எச்சரித்த போது அதனை ஏற்க செவிமறுத்தவர்களின் பெயர்கள் பனாமா பேப்பரில் வெளியாகியது. தற்பொது அவர்கள் உறக்கமின்றி இருக்கிறார்கள். எனவே இந்த முறையும் தப்பிக்க நினைத்தால் வேறு வழிகள் மூலம் அவர்களது பெயர்கள் வெளியிடப்படுவதோடு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜேட்லி தெரிவித்தார்.

ரகுராம் ராஜன் தொடர்பாக சு.சாமி கூறி வரும் கருத்துக்கள் தொடர்பாக கேட்டபோது, ரகுராம் ராஜன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் அனைத்தும் மத்திய அரசை தாங்க் இருக்கும் செயலாகும். அரசை விமர்சிப்பதற்கு எவருக்கும் உரிமை உண்டு அதே சமயம் அது தொடர்பாக உரிய இடத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic