சென்னை: வருகின்ற சட்டமன்ற தேர்தலி பகுஜன் சமாஜ் கட்சி எந்த அணியோடும் கூட்டணி சேராமல் தனியாக 158 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்னை வந்த அதன் தேசிய தலைவரும் உ.பியின் முன்னால் முதலைமைச்சருமான மாயாவதி தீவுத்திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
அவர் பேசியதாவது, இலவசங்களை கண்டு ஏமாந்து போகாமல் வறுமையை ஒழித்து, மக்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். நாட்டை 68 வருடத்திற்கும் மேலாக ஆண்டு வரும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட்டோ, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், தலித், சிறுபான்மை இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் என தேசத்தின் வாழும் 80% மக்களுக்கும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இதுவரை சென்றடையவிலை.
குறிப்பாக தலித் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அவர்களுக்கு எதிரான வன்முறைகள் ஒரு நாள் கூட நடக்காமல் இருந்ததில்லை என்னும் அளவிற்கு குற்றங்கள் அதிகரித்துள்ளன. குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை கிடைக்காததால் தைரியம் பெற்றும் மீண்டும் மீண்டு குற்றச்செயலில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
உத்திரபிரதேசத்தில் 4 முறை ஆட்சி செய்த எங்களது கட்சி ஒரு முறை கூட தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்டதில்லை. காரணம் வாக்குறுதிகளை விட செயல்பாடுகளில் நாங்கள் அதிக நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர்கள். வருகின்றன் தேர்தலில் எங்கள் கட்சி மற்ற கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும், நாங்களும் களத்தில் இருக்கிறோம், நிச்சயம் இந்த தேர்தல் மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பேசினார். கூட்டதிற்கு கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments