Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 24, 2016

ஹரியானாவில் தொடரும் தலித் சமூகத்திற்கு எதிரான தாக்குதல்



ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா அருகே புச்தாலா என்னும் கிராமம் உள்ளது. இங்கே தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இதற்காக மணமக்களை குதிரை வண்டியில் ஏற்றி கோயிலுக்குச்சென்று வழிபடுவது வழக்கம். அங்கே இருந்த உயர் சாதியினர் இதனை எதிர்த்து திருமண வைபவத்திற்காக கூடியிருந்த மக்கள் மீது கற்களை வீசியதால் அங்கு பதட்டமான் சூழ்நிலை நிலவி வருகிறது.

மணமகனின் தந்தை சுரேஷ் குமார் இது தொடர்பாக ஜான்ஸா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, உயர் சாதியினர் 25 பேர் தனது மகனின் திருமணத்தின் போது தடுத்து நிறுத்தி கற்களை கொண்டு தாக்கினர். குதிரை வண்டி சவாரி செய்தாலோ அல்லது கோயிலுக்குள் நுழைந்தாலோ தங்களை கொன்றுவிடுவதாக மிரட்டுகின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

இச்சம்பவர்ம் அக்கிராமத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான போலிஸார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். உயர் சாதியினர் மட்டுமே தங்களின் திருமண வைபவங்களில் மணமக்களை குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டுவரவேண்டும் என்றும் அவர்கள் மட்டுமே கோயிலுக்குள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என்று அக்கிராமத்தைச்சேர்ந்த உயர் சாதியினர் விதிகளை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி காவல்துறை அதிகாரி சிம்மர்தீ சிங் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கும் இத்தகைய காலகட்டத்தில் இன்னமும் சாதியின் பெயரால் அடிமைப்படுத்தப்படும் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது என்பதற்கு இத்தகைய சம்பவங்களே எடுத்துக்காட்டாகும்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic