Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 16, 2016

கலைஞரின் சம்பளத்தை கட் பண்ணினால் என்ன...?


தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கியது. தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தார். சட்டமன்ற லாபிக்கு வந்த அவர் சட்டமன்ற உறுப்பினர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு சென்றார்.

பொதுவாக அலுவலகத்திற்கு ஒரு நாள் லீவ் போட்டுவிட்டால் அதற்குண்டான ஆவணங்களை சமர்பித்தால் தான் சம்பளம் பிடிக்கப்படமாட்டாது. இது தான் நியதி. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி, வீதியில் இறங்கி மக்கள் சேவையும் செய்யமாட்டார், மக்கள் பிரச்சனைகளை எடுத்துவைக்கும் அலுவலகத்திற்கும் செல்லமாட்டார் என்றால் அவருக்கு எதற்காக சம்பளம் கொடுக்க வேண்டும்? இது ஒரு எதார்த்தமான கேள்வி தான்.
ஒவ்வொரு முறையும் தேர்தலில் தோல்வி கண்டு ஆட்சியை இழந்துவிட்டால் அவைக்கு வராமல் வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டு செல்வார் கலைஞர். இதையே அரசு அலுவலகத்திலோ அல்லது தனியார் அலுவலகத்திலோ சாதாரண ஒரு நபர்  செய்தால் அது பெரிய மோசடியாக பார்க்கப்படும். இந்த மோசடியைத்தான் திமுக தலைவர் கலைஞர் இனி வரக்கூடிய ஐந்து வருடங்களுக்கு செய்யப்போகிறார். இதையே தான் முன்பும் செய்திருக்கிறார்.

உரிய இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என மொக்கையான சாக்கை சொல்கிறது திமுக தரப்பு. சரி அது ஆளுங்கட்சியின் தவறாகவே இருக்கட்டும், மேடைகளில் பிரச்சாரம் செய்வதற்கும், தமக்கு தேவைப்படும்போதெல்லாம் வீட்டிலிருந்து அறிவாலையம் செல்வதற்கும் சக்கர நாற்காழியில் போய் வரும் கலைஞர் ஏன் சட்டசபைக்கு மட்டும் அதே சக்கர நாற்காழியில் செல்வதில்லை? என எதார்த்தமான கேள்வி எழவே செய்கின்றது.

ஆக இருக்கை வசதி செய்து கொடுக்கவில்லை என்று சொல்வதெல்லாம் ஒரு சப்பை கட்டுதானே தவிற வேறு இல்லை. தான் தேர்தலில் தோற்றுவிட்டோம் என்ற கவுரவ குறைச்சல் என்ற ஒற்றை காரணத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? தம்முடைய உடலில் பலகீனம் ஏற்பட்ட நிலையிலும் இன்னும் பதவிக்காக தேர்தலி நின்று  எதற்காக வீம்பு செய்ய வேண்டும். ஓய்வில்லாமல் உழைப்பவர் கலைஞர் என்று சொல்வதெல்லாம் சும்மா. தேர்தலில் போட்டியிடாமல் மக்கள் சேவை செய்ய இயாலாதா என்ன?

சட்டசைபைக்கு வந்து அங்கு நடைபெறும் விவாதங்களில் பங்கேற்காமல் வெறும் வருகை பதிவில் மட்டும் கையெழுத்து போட்டு விட்டு மோசடி செய்யும் கலைஞரின் மாதச்சம்பளத்தை பிடிக்க வேண்டும். அந்த சம்பளத்தை வைத்துத்தான் அவரது  குடும்ப செலவுகளை சமாளிக்க வேண்டும் என்பதில்லையே...?


ஒரு எம்.எல்.ஏவிற்கு வழங்கப்படும் குறைந்தபட்ச மாத‌ சம்பள விபரம்:

இழப்பீடு - 7000/-
டெலிபோன் - 5000/-
தொகுதி - 10,000/-
தபால் கொடுப்பனவு - 2500/-
ஒருங்கினைந்த கொடுப்பனவு - 2500/-
போக்குவரத்து - 20,000/-

மொத்தம் - 55,000/- (ஒரு மாதத்திற்கு)

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic