ஈரான் அதிபரின் அழைப்பை ஏற்று 2 நாள் அரசுப்பயணமாக வருகின்ற 22ஆம் தேதி ஈரான் செல்ல இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, பிரதமர் மோடி ஈரான் அதிபரின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ஈரான் செல்கிறார். இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். வர்த்தகத் துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறவிருப்பதாக அவர் கூறினார்.
ஈரானிலிருந்து அதிக அளவு பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்யப்பட்டுவந்தது. அந்நாட்டின் மீது ஐ. நா சபை பொருளாதார தடை கொண்டு வந்த சமயத்தில் இறக்குமதியில் மிகுந்த பின்னடைவு ஏற்பட்டது, தற்போது பொருளாதார தடை விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் பயணத்தை வரையருப்பதற்காக கடந்த மாதம் சுஷ்ம சுவராஜ் ஈரான் சென்றது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments