சர்பானந்தா சொனோவால் அஸ்ஸாம் மாநில முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்றுக்கொண்டார். பா.ஜ.க அஸ்ஸாம் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது இதுவே முதல்முறை. இப்பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பா.ஜ.கவின் தேசிய தலைவர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
முதலைமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் ஏற்கனவே பதவி வகித்து வந்த மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சர்பானந்தா. அஸ்ஸாம் ஆளுனர் ஆசார்யா முதலைமைச்சர் மற்றும் மந்திரிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமரி மோடி, "வளர்ச்சியை எதிர்பார்த்து பா.ஜ.கவிடன் ஆட்சியை ஒப்படைத்த அஸ்ஸாம் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சர்பானந்தா பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர், மிகச்சிறந்த போராளி தற்போது அஸ்ஸாம் மக்களை வழ நடத்திச்செல்லவிருக்கிறார். அவர் மத்திய மந்திரியாக கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டுள்ளார். அவரது திறமைகளை கண்டு நானே வியந்திருக்கிறேன். சர்பானந்தா ஒரு நல்ல மனிதர்" இவ்வாறு பேசினார்.
பஞ்சாப் முதலைமைச்சர் பிரகாஷ் சிங் படால், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, சத்தீஸ்கர் முதலமைச்சர் ராமன் மற்றும் மத்திய பிரதேச முதலைமைச்சர் சிவராஜ் செளகான் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னால் முதலைமைச்சர் தருன் கொகோயும்(காங்கிரஸ்) இதில் கலந்து கொண்டார்.
பா.ஜ.கவின் முக்கிய தலைவர் எல்.கே அத்வானி, தேசிய தலைவர் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, ஆனந்த் குமார், சுரேஷ் பாபு மற்றும் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க அஸ்ஸாமில் போடோ மக்கள் முன்னனி, அஸ்ஸாம் கன பரிஷத் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 86 இடங்களில் வெற்றி பெற்றன. கூட்டணி கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Write comments