பள்ளிகளுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் 1009 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து உலக சாதனை படைத்த பிரணவ் தனவாடே என்ற மாணவனுக்கு 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கவில்லை அதே சமயம் சொல்லும் அளவிற்கு விளையாட்டில் எந்த சாதனையும் படைத்திடாத சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனிற்கு இடம் கிடைத்துள்ளது.
பிரணவ் சில மாதங்களுக்கு முன் இதுவரை யாருமே படைத்திராத ஒரு உலக சாதனை படைத்தார். கிரிக்கெட் விளையாட்டில் ஒரே போட்டியில் சரமாரியாக விலாசி 1009 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஏழை ஆட்டோ டிரைவரின் மகனான பிரணவிற்கு இந்திய அணியில் இடம்பிடிப்பதே லட்சியமாக கொண்டு இருக்கிறார். இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்தியும் 16 வயதுக்குட்பட்டோர் போட்டியில் விளையாட அவர் தேர்வு செய்யப்படவில்லை இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் தனது தந்தை மிகப்பெரிய ஆட்டக்காரர் என்ற ஒரே காரணத்திற்காக சச்சினின் மகன் அர்ஜுனிற்கு அந்த அணியில் இடம் கிடைத்திருப்பதை பார்க்கும்போது திறமையானவர்கள் பலரும் தட்டிக்கழிக்கப்படுகிறார்கள் என்று தெரிகிறது.
அதே சமயம் தந்தையும், மகனும் ஒரே துறையில் சோபித்ததாக சரித்திரம் இல்லை. கவாஸ்கர் மிகப்பெரும் ஆட்டக்காரராக இருந்தார் ஆனால் அவரது மகனோ கவாஸ்கரின் மகன் என்ற ஒற்றை அடையாளத்தோடு இந்திய அணியில் இடம்பிடித்தாலும் இன்று காணாமல் போய்விட்டார். தற்போது இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் யுவராஜ் சிங்கின் தந்தையும் ஒரு கிரிக்கெட் வீரர் தான் ஆனால் பெரிதாக எதுவும் சாதனை படைக்கவில்லை. அதே போல் சச்சின் மிகப்பெரும் சாதனையாளர் தான் ஆனால் அதையே காரணமாக வைத்து அவரது மகனுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் அவர் கிரிக்கெட்டில் சாதனை படைப்பார் என்று எண்ணிவிட முடியாது. பரிந்துரை மூலம் அணியில் இடம்பிடித்து விடலாம் ஆனால் திறமைகள் இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் என்பதே நிதர்சனம்.
No comments:
Write comments