ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கிற்கான இறுதி வாதம் நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கிறது. இதன் மூலம் இவ்வழக்கின் விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதாவ கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார். இதனையடுத்து கர்நாடகா அரசு சார்பிலும் திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரும் உச்ச நீத்மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மே 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பி.வி ஆச்சார்யா வாதத்தை எடுத்துவைத்தார். அதனை அடுத்து ஜூன் 1ஆம் தேதி விசாரணையை ஒத்திவைப்பதாகவும் அன்றைய தினமே அனைத்து தரப்பு வாதங்களையும் முடித்துவிடவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை மீண்டும் நாளை வரவிருக்கிறது. வாதங்களும் நாளைய தினம் முடிந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு நிலைக்குமா என்பது தீர்ப்பு வந்தவுடன் தெரிந்துவிடும். இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடப்பதால் இதுவே இறுதியாக இருக்கும்.
No comments:
Write comments