Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 19, 2016

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி



தமிழ சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. இதில் 130 இடங்களுக்கு மேல் வெற்றி அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கின்றது.

தமிழகத்தில் 6 முனைப்போட்டி என்கிற ரீதியில் ஒவ்வொரு கூட்டணியும் தாங்களே ஆட்சியை பிடிப்போம், திமுக-அதிமுக ஆகிய இருகட்சிகளும் நாட்டை சீரழித்துவிட்டன என்கிற ரீதியில கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி மீண்டும் அதிமுகவே ஆட்சியை தொடர இருக்கிறது. கடந்த 30 வருடங்களில் மாறி மாறி ஆட்சி வந்துகொண்டிருந்த நிலையில் 1984 ஆண்டிற்கு பிறகு ஆட்சியில் இருந்த கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிப்பது இதுவே முதல் முறை.

மக்கள் நலக்கூட்டணியும் சரி, பா.ம.கவும் சரி தாங்களே திராவிட கட்சிகளுக்கான மாற்று சக்தி என்று பிரச்சாரம் செய்து வந்த வேலையில் அவர்களது பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடாமல் போனதோடுமட்டுமல்லாமல், மக்களிடத்தில் அவர்களுக்கு எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. ஒரு இடத்தில் கூட இவ்விரு அணியினரும் வெற்றி பெறவில்லை.

மற்றொரு புறம் கடந்த 2011 சட்டசபை தேர்தலில் மிகப்பெரும் தோல்வியைக்கண்ட திமுக இம்முறை மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி 100ற்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கூட்டணி வென்றிருக்கிறது. இதன் மூல பலமிக்க எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் நுழையும். கடந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், மமக, சமக என பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நுழைந்தனர். ஆனால் இம்முறை திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட அனைவருமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால் மொத்த 4 அல்லது 5 கட்சிகளின் உறுப்பினர்கள் மட்டுமே சட்டமன்றத்தில் நுழையவிருக்கின்றனர். யாரும் எதிர்பார்த்திராத ஒரு வித்தியாசமான முடிவையே இந்த தேர்தல் அளித்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic