Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 19, 2016

முதல்வர் வேட்பாளருக்கு ஏற்பட்ட சத்திய சோதனை


தேமுதிக+மக்கள் கூட்டணி சார்பாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கேப்டன் விஜயாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்டு தோழ்வி அடைந்தார். 27 ஆயிரம் வாக்குகள் பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

மதிமுக பொதுச்செயலாளர் ஒருங்கினைத்த வைகோ தேமுதிகவும் தங்களோடு இணையவேண்டும், அப்படி இணையும் பட்சத்தில் விஜயாந்தை நாங்கள் முதல்வர் வேட்பாளராக முன்னிருத்துவோம் என்று கூறியிருந்தார். விஜயாகாந்த் கடந்த தேர்தலில்  அதிமுகவோடு கூட்டணை வைத்து தேர்தலில் வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவர் எனும் அந்தஸ்த்திற்கு உயர்ந்தார்.

ஆனால் கடந்த தேர்தல் முடிந்த சில மாதங்களில் கூட்டணி முறிவு ஏற்பட்டு அதிமுகவை தொடர்ந்து விமர்சிக்கத்துவங்கினார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க, பா.ம.க, மதிமுக‌ உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலில் சந்தித்தார். அந்த தேர்தலிலும் பா.ஜ.க வை தவிர வேறு எந்த கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இவ்வருட சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் யாரோடு சேர்வார் என்று பரபரப்பு துவக்கத்திலிருந்தே இருந்து வந்தது.  சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும்போது தனக்கு திமுக, அதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட மூன்று கட்சிகளும் தங்களோடு கூட்டணிவைக்குமாறு அழைத்து பணம் எவ்வளவு கேட்டாலும் தருகிறோம் என்று கூறியதாக தெரிவித்தார்.

ஆனால் அதையெல்லாம் மறுத்து மக்கள் நலக்கூட்டணியோடு இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார். வழக்கப்போலவே பிரச்சாரங்களில் உளறுவது, சத்தம்போட்டு திட்டுவது, அடிப்பது என்கிற ரீதியிலேயே அவரது பிரச்சாரம் சென்றது. மக்கள் அவரை முதல்வர் வேட்பாளர் என்னும் அளவிற்கு அவரை உயர்த்தவில்லை என்பதையே உளுந்தூர்பேட்டையில் அவர் தோற்றதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic