நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துவருகின்ற வேலையிலும் இந்தியாவில் மட்டு பெட்ரோலின் விலை மாதத்திற்கு இரண்டு முறை உயர்த்தப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் மதிப்பு குறைந்தால் எண்ணெய் வளம் உள்ள நாடுகள் வேறு வழியின் கச்சா எண்ணெய்களை குறைந்த விலையில் சரவதேச சந்தையில் விற்பார்கள். மேலும் அதனை ஈடு கட்டுவதற்காக தங்கள் நாடுகளில் அத்திப்பூ பூத்தாற்போல் பெட்ரோல் விலையை உயர்த்துவார்கள். இதுவே இயல்பான பொருளாதார நிலைபாடு. ஆனால் கச்சா எண்ணெயின் விலை கடுமையா சரிந்து வருகின்ற வேலையில் கூட இந்தியாவில் மட்டுமே பெட்ரோல் விலை ஏற்றப்பட்டு வருகிறது.
எண்ணெய் விலை சரியும் போதெல்லாம் உப்புச்சப்பிற்காக பைசா அளவில் விலையை குறைப்பது, விலை ஏற்றம் என்றுவிட்டால் லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை ஏற்றுவதுமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிப்பை தனியாரிடம் ஒப்படைத்ததே காரணம் என்று பலரும் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஒவ்வொரு பரிவர்த்தனைகளும் மற்றொன்றோடு தொடர்புபடுத்தி இருப்பதாலேயே பெட்ரோல் விலை ஏறும்போதெல்லாம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் எகிறுகிறது.
அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும், இலங்கையிலும் இந்தியாவை விட பெட்ரோல் விலை குறைவு என்றால், நமது நாட்டின் பொருளாதார கொள்கையில் சறுக்கு இருப்பதையே காட்டுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப்பெறவேண்டும் என பல அரசியல் கட்சித்தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏற்றிய விலை ஏற்றியதுதான் எந்த காலத்தை ஏற்றி விலை குறைக்கப்பட்டுள்ளது?
No comments:
Write comments