காட்டுமன்னார் கோவில் தொகுதியின் வாக்குப்பதிவை மீண்டும் எண்ண அவேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூடணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதன் தலைவர் தொல் திருமாவளவன் காட்டு மன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்டு 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் அத்தொகுதிகளின் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்றும் அந்த தொகுதியில் 81வது வார்டில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த வார்டிற்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என திருமாவளவன் தேர்தல் ஆணைத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதை போன்ற கோரிக்கையை திமுகவின் அப்பாவு அவர்களும் தேர்தல் ஆணையத்திடம் வைத்திருப்பதால் தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டது.
இதனை தேர்தல் ஆணையம் செவிசாய்க்குமா என்பது கேள்விக்குறிதார். காரணம் ஏற்கனவே தேர்தல் அதிகாரி அறிவித்தது போல் இனி தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நீதிமன்றத்தை தான் நாட வேண்டுமென்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments