ரஜினி - இயக்குநர் பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் - கபாலி. இந்தப் படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ராதிகா ஆப்தே, தினேஷ், தன்ஷிகா, கலையரசன் ஆகியோரும் நடிக்கிறார்கள். கலைப்புலி S. தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
கபாலி படத்தின் டீசர் சென்னையில் மே 1 அன்று வெளியானது. காலை 11 மணிக்கு இணையதளத்தில் வெளியான கபாலி டீசருக்கு ரசிகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. ரஜினியின் ரசிகர்கள், திரையுலகினர் எனப் பலரும் கபாலி பட டீசரை பகிர்ந்தார்கள். டீசர் வெளியிட்ட 24 மணி நேரத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்தது சாதனையாகக் கருதப்பட்டது. பிறகு, அந்த டீசர், 1 கோடி பார்வைகளைக் (Views) கடந்தது. இந்திய அளவில் வேறு எந்தப் படத்தின் டீசரும் 4 நாள்களில் 1 கோடி பார்வைகள் என்கிற எண்ணிக்கையைத் தொட்டதில்லை என்பதால் புதிய சாதனையை நிகழ்த்தியது கபாலி டீசர்.
அதுமட்டுமில்லாமல் டீசெரில் ரஜினி கூறிய "மகிழ்ச்சி" என்ற டயலாக்கும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் டிரன்டானது குறிப்பிடத்தக்கது.
கபாலி படம் மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் வெளியாகலாம் என்று சமீபத்தில் தகவல் தெரிவித்தார் ரஜினி. பின்னணி இசை உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே படத்தை எப்போது வெளியிடலாம் என்பது குறித்த சில ஆலோசனைகள் தாணுவை யோசிக்கவைத்துள்ளன.
ஜூலை மாதம் 1-ம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பாளர் தாணு முதலில் திட்டமிட்டதாகத் தெரிகிறது. ஆனால் அந்தக் காலட்டம் ரம்ஜான் நோன்புக் காலம் என்பதால் படத்தை ஒருவாரம் தள்ளி வெளியிட மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து தாணுவுக்கு வேண்டுகோள் வந்துள்ளது.
ரம்ஜான் நோன்புக் காலம் என்பது ஜூன் 6 முதல் ஜூலை 5 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் ஜூலை 7-ம் தேதி படத்தை வெளியிடுமாறு வெளிநாடுகளில் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இன்றைய நிலவரப்படி கபாலி, ஜூலை 7-ம் தேதி வெளியாக வாய்ப்புண்டு என்று படக்குழுவினர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments