ஆப்ரின் ரெஹ்மான் (28) இந்தூரைச்சேர்ந்த வழக்கறிஞர் அஜ்கர் என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். திருமணம் ஆனதிலிருந்து கட்டத்தட்ட ஒரு வருடமாக தன்னுடைய கணவர், மாமனார் மற்றும் மாமியார் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். தீடீரென ஏற்பட்ட விபத்தால் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்ற ஆப்ரின் அங்கிருந்து கொண்டு தனது கணவனுக்கு எத்துனையோ முறை போனில் தொடர்புகொள்ள முயன்றும் போன் காலை துண்டித்துவந்திருக்கிறார் அஜ்கர்.
மூன்று மாதங்கள் கழித்து ஆப்ரினிற்கு ஒரு ஸ்பீட் போஸ்ட் வந்துள்ளது, அதில் அஜ்கர் தான் முஸ்லிம் தனியார் சட்டப்படி ஆப்ரினை விவகாரத்து செய்வதாகவும், இனி அவளுடன் வாழ்வதற்கு தான் தயாராக இல்லை என்றும் அதில் தெரிவித்திருக்கிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆப்ரின் அதிர்ந்து போயுள்ளார்.
"ஸ்பீட் போஸ்ட் மூலம் கணவர் விவகாரத்து செய்யும் முறையை எங்கையாவது கேள்விப்பட்டிருக்கிறோமா? நான் என் கணவரோடு சேர்ந்து வாழவே விரும்புகிறேன், ஆனால் இந்த மூன்று தலாக் கூறும் சட்டம் பெண்களைப்பற்றியோ, அவர்களது மனநிலை பற்றியோ கவலைப்படாது. ஒரு கணவன் தனக்கு தேவைப்பட்டால் 3 தலாக் கூறலாம், ஆனால் அதில் அந்த பெண்ணிற்கு சம்பந்தம் தானா என்பதையெல்லாம் இந்தச்சட்டம் யோசிக்காது" என்று ஆப்ரின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் விசாரணையை கோரியுள்ளார் ஆப்ரின்.
ஆப்ரினிற்கு ஆதரவாக தேசிய முஸ்லிம் பெண்கள் நலச்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் நிறுவனத்தலைவர் நசீம் அக்தர் கூறும்போது "இது போன்ற இரண்டு வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றிருக்கிறோம். இது ஆப்ரினுக்காக மாட்டும் நாங்கள் போராடவில்லை, எல்லா முஸ்லிம் பெண்களுக்காகவும் இதை செய்கிறோம். இந்த மூன்று தலாக் கூறும் முறை மனித உரிமைக்கு எதிரானது, இத்தகைய சட்டங்களை இந்தியாவில் தடை செய்யவேண்டும்" என்று கூறினார்.
No comments:
Write comments