வியட்னாமில் தெருவோரம் இருந்த சிறிய ஹோட்டலுக்குள் அமெரிக்க அதிபர் ஒபாமா நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வியட்னாமில் அரசு முறை பயணமாக சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இருநாடுகளின் உறவுகள் குறித்த சந்திப்பி கலந்து கொண்டார். இயல்பாகவே ஒபாமா அமெரிக்காவில் அவ்வப்போது தன்னுடைய அலுவலகப்பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு மக்களோடு மக்களாக சாலையோரம் நடந்து சென்று அங்க வருபவர்களிடம் கைகுழுக்கி நலம் விசாரிப்பது வழக்கம். அந்த வகையில் வியட்னாம் சென்ற ஒபாமா இதே முறையை கையாண்டு வியட்னாம் மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
வியட்னாமில் தெருவோரம் இருந்த சிறு ஹோட்டலுக்கு கேமராவுடன் சில வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் நுழைந்தன. வழக்கம் போல் வியட்னாமின் உணவு வகைகளை படம்பிடித்து டி.வியில் ஒளிப்பரப்பாக்க வருகிறார்கள் என்ற நினைத்த ஹோட்டல் உரிமையாளுக்கு இப்போது வரப்போவது அமெரிக்க அதிபர் ஒபாமா என்று தெரியாது. சிறிது நேரத்திலேயெ ஒபாமா வந்ததும் ஹோட்டல் உரிமையாளர் உட்பட அங்கிருந்து உணவருந்திக்கொண்டிருந்த அனைத்து வாடிக்கையாளர்களும் அதிர்சியி உரைந்து போயினர். உள்ளே நுழைந்த ஒபாமா தனக்கு தேவையான உணவை கேட்டுப்பெற்றுக்கொண்டு அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். இத்தகவல் அப்பகுதியில் தீயாக பரவ பாதுகாப்புக்கருதி காவல்துறையினர் அந்த தெரு வழியே யாரையும் அனுமதிக்கவில்லை. உணவு உண்ட பின் சில நேரம் கழித்து ஒபாமா கிளம்பிச்சென்றார். அங்கிருந்த மக்கள் தங்களின் நியாபகத்திற்காக அதிபருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
No comments:
Write comments