இது தொடர்பாக நீண்ட பெயர் பட்டியலை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் 285 நபர்கள் இந்தியர்கள் என தெரிகிறது. ஐ.எஸ் அமைப்பு தான் கொல்லப்போவதாக வெளியிட்டுள்ள பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என கண்டறியப்பட்டுள்ளது. தங்கள் அமைப்பின் மீது மக்களுக்கு அச்சம் ஏற்பட வைப்பதற்காக இவ்வாறு கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த கூட்டுத்தாக்குதல் வலிமுறையில் அல்லாமல் தனி நபர் தாக்குதல் மூலமாக நடத்த திட்டமிடலாம் என உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பலரையும் தீவிரமாகவும், ரகசியமாகவும் கண்காணித்து வருவதாகவும். அவர்களில் யாரேனும் ஐ.எஸ் அமைப்பினரோடு தொடர்பில் இருக்கிறார்களா என்பதை சோதித்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காக அவ்விளைஞர்கள் பயன்படுத்தும் செல்போன் எண்கள், சமூக வலைத்தள கணக்குகள், ஈ-மெயில் முகவரிகள் என அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
No comments:
Write comments