இனி தான் சினிமாக்களில் கவர்ச்சியாகவோ, ஆபாசமாகவோ நடிக்கப்போவதில்லை என நடிகை சமந்தா தெரிவித்துவிட்டதால் ஆந்திர ரசிகர்கள் ரொம்பவே துக்கதில் ஆழ்ந்துள்ளனர்.
நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு விரைவில் திருமணம் செய்யப்பட்டுள்ளதாக நடிகை சமந்தா தொடர்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இனி சினிமாவில் என்னிடம் கவர்ச்சியை எதிர்பார்க்காதீர்கள் என்று இயக்குனரிடம் திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம் சமந்தா. இதனால் இயக்குனர்களும் தெலுங்கு ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தெலுங்கு படங்களில் தாராளமாக காட்டி வந்த நடிகை சமந்தா இனி அப்படி காட்டி நடிக்கக்கூடாது என மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து கண்டிஷன் போட்டுவிட்டதை அடுத்து இவ்வாறான முடிவை சமந்தா எடுத்துவிட்டதாக தகவல். இனி வரும் காலங்களில் நடிப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து சினிமாவிற்கே முழுக்கு போட்டுவிடுவார். நடிகர் நாக சைதன்யாவும் சமந்தாவும் தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இவ்விருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது. சைதன்யாவின் தாயார் ஒரு நாள் சமந்தாவின் வீட்டிற்கு சென்று ஒரு நாள் முழுக்க அவரோடு கழித்திருக்கிறார். சமந்தாவின் நடவடிக்கைகள் அவருக்கு பிடித்து போய்விட காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டார் என்று கூறப்படுகிறது.
No comments:
Write comments