Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 16, 2016

பிரபஞ்சத்தின் மிகப்பெரிய கிரகம் கண்டுபிடிப்பு: 2 சூரியன்களை சுற்றி வருவதாக நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு...!!!

நாசா விஞ்ஞானிகளால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கெப்ளர்-1647 பி கிரகம்.

பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய கிரகம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய (நாசா) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த கிரகம் 2 சூரியன்களை சுற்றி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், கிரீன்பெல்ட் பகுதியில் உள்ள நாசாவின் கொட்டார்டு ஸ்பேஸ் பிளைட் சென்ட்டர் மற்றும் சான்டியாகோ மாகாண பல்கலைக்கழக வானியல் விஞ்ஞானிகள், கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி உதவியுடன் புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

பால்வெளி (Milky Wayமண்டலத்தில் வடக்குப் பகுதியில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தில் இடம் பெற்றுள்ள இந்த கிரகத்துக்கு கெப்ளர்-1647பி என பெயரிட்டுள்ளனர். இந்த பிரபஞ்சத்திலேயே இதுதான் மிகப்பெரிய கிரகமாக இருக்கும் என கருதுகின்றனர். இப்போது வரை வியாழன் கிரகம்தான் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

3,700 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கிரகத்தின் வயது 440 கோடி ஆண்டுகள் (கிட்டத்தட்ட பூமியின் வயதாம்) என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது நமது சூரிய குடும்பத்துக்கு (Galaxy) வெளியே உள்ள 2 சூரியன்களை சுற்றி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஒன்று நமது சூரியனைவிட பெரியதாகவும் மற்றொன்று சிறியதாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. புதிய கிரகம் அதன் சூரியன்களைச் சுற்றிவர 1,107 நாட்கள் (சுமார் 3 ஆண்டுகள்) எடுத்துக் கொள்கின்றன.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic