Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 26, 2016

வாயைக்கொடுத்து புண்ணாக்கிக்கொள்ளும் பிரபல அதிமுக பிரமுகர்!

nanjil sampath punch dialogue in hospital

ஒவ்வொரு பிரபலமும் ஒவ்வொரு டயலாக்கை பேசி கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகுவார்கள். நடிகர் பிரபு சந்திரமுகி படத்தில் பேசிய வசனம் "என்ன கொடுமை சரவணன்!", நடிகை லட்சுமி "என்னம்மா இப்படி பண்றீங்களேமா!", இதை வைத்து நமது நெட்டிசன்கள் செமத்தியாக கலாய்த்து எடுத்தார்கள்.

இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்தது நம்ம அதிமுக கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத். பிரபல டி.வி சேனல் ஒன்றில் பேட்டியளிக்கும் போது இவர் கூறிய வசனம் "அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்" நெட்டிசன்களுக்கு ரொம்பவே பிடித்து போக வச்சு செய்ய ஆரம்பித்தனர். இதன் விளைவு பாவம், கொள்கை பரப்பு செயலாளர் பதவி பறிபோனது.

தற்போது ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது நாஞ்சில் சம்பத் மற்றுமொரு பஞ்ச் டயலாக் பேசியுள்ளார். இதனால் அதிமுக காரர்களே இவர் மீது கடும் ஆத்திரத்தில் இருக்கின்றனர்.

ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது நாஞ்சில் சம்பத் மருத்துவமனை வளாகத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறும்போது "முதல்வர் அம்மா விரைவில் வீடு திரும்புவார். அவர் நலமுடன் இருக்கிறார். மருத்துவர்களின் கண்காணிப்பில் அம்மா இருக்கிறார். அம்மாவின் கண்காணிப்பில் தமிழகம் இருக்கிறது" என பேசியுள்ளார்.

இதனால் அதிமுக காரர்களே கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். மனுசனுக்கு எந்த நேரத்தில் எந்த இடத்தில் பஞ்ச் டயலாக் பேசனும்கிற விவஸ்தையே இல்லையா என குமுறுகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic