கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சி.பி.எம் கட்சியினரிடையே நடைபெற்ற மோதலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச்சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச்சேர்ந்த சுஜேஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் சி.பி.எம் கட்சியைச்சேர்ந்த 20 பேர் இன்று மதியம் கூரிய ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முற்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச்சேர்ந்த மற்ற இரு நபர்களான அருண், தீபேஷ் ஆகியோரும் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சுஜேஷ் என்பவரும் காயம் பலமாக ஏற்பட்டுள்ளதால் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சமீபகாலமாக கண்ணூர் மாவட்டத்தில் அரசியல் வன்முறைகள் அதிகம் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் - பாஜக மற்றும் சிபிஎம் கட்சியினரிடையே நடைபெற்று வரும் மோதலில் பல சம்பவங்கள் கொலையில் முடிந்திருக்கிறது. சென்ற மாதம் சி.பி.எம் கட்சியை சேர்ந்த ஒருவரும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைசேர்ந்த ஒருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். சட்டமன்றத்தில் பா.ஜ.க மற்றும் சி.பி.எம் தலைவர்கள் தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துகொண்டிருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

No comments:
Write comments