50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆண்கள், பெண்கள் என இதற்கு ஆதரவாக கையெழுத்திட்டிருக்கிறார்கள் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இது பெண்களின் உரிமை தொடர்பானது, ஆண்கள் தற்போது இச்சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மூலமாக 3 தலாக் கூறிவருகிறார்கள். இதற்கு முல்லாக்களும் துணை போகிறார்கள். இது மனித உரிமைக்கும் எதிரானது, பெண்களுக்கு எதிரானது இத்தைகைய பிற்போக்கு சிந்தனைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இவ்வாறான விவகாராத்து விடுக்கும் முறைக்கு தடை ஏற்படுத்த வெண்டுமென அச்சங்கங்கத்தின் தலைவி ஜாகியா சோமான் தெரிவித்துள்ளார்.
குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஒடிசா, மேற்குவங்காளம், பீஹார், ஜார்கண்ட், கேரளா மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த கையெழுத்து வேட்டை நடைபெற்றதாகவும் இதில் 92% பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதே பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. டெஹ்ராடூனைச்சேர்ந்த சவாரா பானு என்ற் பெண் இச்சட்டத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments