தாய்லாந்தில் உள்ள கான்சானபுரி மாகாணத்தில், பாங்காக்-ல் இருந்து 140 கி.மீ. தொலைவில் "வாட் பா லுவான்ங்தா புவா யன்னாஸாபன்னோ' என்ற பொளத்த மதக் கோயில் அமைந்துள்ளது.
பரவலாக "புலிக் கோயில்' என்றழைக்கப்படும் இந்தக் கோயிலில், ஏராளமான புலிகள் வளர்க்கப்படுகின்றன. இந்தக் கோயிலுக்கு தாய்லாந்து அரசு 7 புலிகளை அன்பளிப்பாக கடந்த 2001-ஆம் ஆண்டு வழங்கியது.
எனினும், இந்த புலிக் கோயிலில் விலங்குகள் துன்புறுத்தபடுவதாகவும், சட்ட விரோதமாக புலிகளும், அதன் உறுப்புகளும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாகவும் நீண்ட காலமாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில், புலிக் கோயிலில் ஆய்வு மேற்கொள்வதற்காக தேசிய வனப் பூங்காக்கள் மற்றும் வன விலங்குக் காப்பகத் துறை அதிகாரிகள் மாகாண நீதிமன்றத்தில் முறையாக தேடுதல் உத்தரவைப் பெற்றனர்.
இந்நிலையில் கோவிலில் உள்ள குளிர்பதனப் பெட்டியில் இருந்து 40 புலிக்குட்டிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த உடல்களை கைப்பற்றிய வனத்துறையினர் இறந்தவை அனைத்தும் 1 வார வயதுள்ள புலிக்குட்டிகள் என்று தெரிவித்தனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்த புலிக் கோவில் விரைவில் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments