கல்விக்காக விமானத்தில் பயணிக்கும் மாணவர்களுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் கட்டணத்தில் சலுகை அறிவித்துள்ளது.
ஆயிரம் கிலோ மீட்டர் வரையிலான பயணத்திற்கான கட்டணம் ரூ.3,500 எனவும், அதற்கு மேலான பயணத்திற்கு ரூ.5,500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரியில் சேர, நுழைவுத்தேர்வில் பங்கேற்க செல்லும் மாணவர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம் என ஏர் இந்தியா கூறியுள்ளது. இந்த சலுகை ஜூன் 1 முதல் ஜூலை 31வரை டிக்கெட் பெற்றுக்கொண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பயணம் செய்யலாம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments